ஜெயலலிதா பதவி ஏற்பதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தே.மு.தி.க. வக்கீல் மனு

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் தே.மு.தி.க. வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–

கர்நாடக ஐகோர்ட்டு ஜெயலலிதாவை விடுவித்து அளித்துள்ள தீர்ப்பில் குளறுபடி உள்ளது. கீழ்கோர்ட்டு அளித்த தீர்ப்பு சரியா, ஐகோர்ட்டு தீர்ப்பு சரியா என்பதை சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்ய வேண்டும்.

நான் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை ஜெயலலிதா முதல்–அமைச்சராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிராபிக் ராமசாமியும் இது போன்ற மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply