நேபாளத்தில் நிலச்சரிவு: பீகாரின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து பீகாரின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம்சே கிராமத்தில் சமீபத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் இடிபாடுகள் காளி கண்டகி ஆற்றின் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் தண்ணீர் அங்கு தேங்கி உள்ளது. இதில் உடைப்பு ஏற்பட்டால் இதன் மூலமாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு இந்தியாவுக்குள் வெள்ள நீர் வர வாய்ப்பு உள்ளதாக நேபாள அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பீகாரின் கிழக்கு சம்பரன், மேற்கு சம்பரன், கோபால்கன்ஜ், சிவான் மற்றும் சரண் ஆகிய 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாக நீர் வளத்துறை செயலாளர் தீபக் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply