ராணுவத்தினரை மீட்கும் நடவடிக்கையில் 300 தீவிரவாதிகள் பலி

சிரியாவின் இட்லிப் நகரில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய ராணுவத்தினரை மீட்கும் நடவடிக்கையில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், குர்துப்படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையில் கூட்டு ராணுவத் தாக்குதலும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் இட்லிப் நகரில் ராணுவ முகாம் ஒன்றை தீவிரவாதிகள் சுற்றிவளைத்தனர். அங்குள்ள ராணுவத்தினரை மீட்கும் நடவடிக்கையில் தீவிரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் பால்மைரா நகரில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400 பொது மக்கள் கொலை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply