வீண் பழிசுமத்தும் வக்கிர அரசியலை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் :உதயராசா
யாழ் நீதிமன்ற தாக்குதல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் மாத்திரம் தண்டிக்கப்பட வேண்டுமென கோருவதுடன் . ஏனையவர்கள் மீது வீண் பழிசுமத்தும் வக்கிர அரசியலை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்.யாழ் புங்குடிதீவில் இடம்பெற்ற சி. வித்தியாவின் மீதான காமக் கொடுரர்களின். வன்புணர்வுக் கொலையினை கண்டித்து கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த தமிழினமும் உணர்சிமேலீட்டால் வீதிக்கு இறங்கி போராடிய போது யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் வரம்பு மீறி யாழ் நீதிமன்றக்கட்டிடம் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவாக 130 பேர் கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் இதில் உண்மையாகவே வன்முறையில் ஈடுபடாத அப்பாவிகளும் உள்ளடங்கியுள்ளமை வேதனைக்குரியது .ஆர்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்பட மற்றும் காணொளிக் காட்சிகளின் ஆதாரங்கள் மூலம் வன்முறையில் ஈடுபட்டவர்களை மாத்திரம் அடையாளம் கண்டு வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி ஏனையோரை விடுதலை செய்ய அரசாங்கம் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம். இந்த மாணவியின் கொடூர கொலையினை வைத்து இலாபம் அடைய முயற்சிக்கும் கூட்டமைப்பினர் கீழ்த்தரமாக நடந்து கொள்வதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் .
நேற்றயதினம் ஊடகம் ஒன்றில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்றம் மீதான வன்முறைக்கு கூட்டமைப்பு அல்லாத பிற கட்சிகளே காரணமென குற்றம்சாட்டிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது .தாங்கள் கூறுவதை எல்லாம் இந்த அப்பாவி தமிழ் மக்கள் அப்படியே நம்பிவிடுகிறார்கள் என்ற அவர்களின் அறியாமையை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இவர்கள் எதற்கோ முடிச்சிபோட முனைகின்றார்கள் முழுக்க முழுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகான சபை உறுப்பினர்கள் சிலரால் வழிநடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் என்ற உணர்வோடு கலந்து கொண்ட ஒருசில சிறிய கட்சிகளின் சில உறுப்பினர்கள் மீது பழியை போட்டுவிட்டு தங்களை புனிதர்களாக காட்டிக்கொள்ள முனைவது அருவருக்கத்தக்க செயலாகும்.
காலம் காலமாக சகல பிழைகளையும் ஏனைய கட்சிகள் மீது சுமத்திவிட்டு தாங்கள் செய்கின்ற தவறுகளை மறைத்து மக்களை ஏமாற்றும் செயலை இந்த அப்பாவி மாணவியின் துன்பத்திலும் அரங்கேற்றி இருக்கின்றார்கள் எதிர் காலத்தில் இவ்வாறான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தங்களது வீட்டில் கணவன் மனைவியருக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளுக்கும் ஏனைய கட்சிகள்தான் காரணம் எனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் அது பொற்குடம் என்பது போல அவர்கள் செய்கின்ற தவறுகள் அனைத்தும் நீதியானது வளர்ந்துவரும் சிறிய கட்சியகள் எது செய்தாலும் அது பிழை என காட்டப்படுகின்றது. இவ்வாறு நீங்கள் தொடர்ந்து மக்களை ஏமாற்றலாம் ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை மறந்து விடாதீகள் மற்றவர்கள் மீது வீண் பழிசுமத்தி வாழும் உங்களுக்கும் ஒருநாள் இறைவனுக்கு பதில்சொல்லும் நிலை ஏற்படும் என்பதில் மாற்றம் இல்லை. இந்த உலகத்தில் மற்றவர்களை அழித்து தாங்கள் மட்டும் வாழ நினைத்த பலர் இருத்த இடம் தெரியாமல் போயுள்ளனர் என்பது வரலாறு எனவே இனியாவது இவ்வாறான வங்குரோத்து அரசியலை கைவிட்டு நம்பி வாக்களித்த மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதையாவது செய்ய முன்வாருங்கள் .
நன்றி
ப.உதயராசா
ஸ்ரீ ரெலோ
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply