பூமியில் முளைத்த விண்கலம்: சீனாவின் விசித்திர அலுவலகம்
ஹாலிவுட்டில் மெகா ஹிட்டான ‘ஸ்டார் ட்ரெக்’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. ஆனால் சீனாவில் உள்ள ரசிகர் அவர்களைவிட கொஞ்சம் அல்ல ரொம்பவே வித்தியாசமானவர். அந்த திரைப்படத்தில் வரும் ஸ்டார் ட்ரெக் விண்கலம் அப்படியே பூமியில் தரையிறங்கி நிற்கிறதோ? என்று நினைக்கும் அளவிற்கு அச்சு அசல் அந்த விண்கலம் போன்ற தோற்றத்தில் தனது அலுவலகத்தைக் கட்டியுள்ளார்.
சீனாவின் புசோ நகரில் உள்ள இந்த விசித்திர கட்டிடம் தான் தற்போது சீன ஊடகங்களின் ஹாட் டாபிக். மொபைல் இன்டர்நெட் அப்ளிகேஷனான ‘நெட் டிராகன்’ என்ற நிறுவனத்தின் தலைவரான லியு டெஜியன், 160 மில்லியன் டாலர் செலவில் இந்த அலுவலகத்தைக் கட்டியுள்ளார். இதற்கு ‘எண்டர்பிரைஸ்’ என்று பெயர் வைத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply