சுகாதாரம் தொடர்பான ஐ.நா. வின் பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்
சுகாதார பாதுகாப்புக்கான நிதி உபாயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக மன்றத்தின் பிராந்திய மாநாடு இன்று இலங்கையில் ஆரம்பமாகிறது.
கொழும்பில் இன்று ஆரம்பமாகும் இந்த மாநாடு எதிர்வரும் 18ஆம் திகதி முடிவடையவுள்ளது. சுகாதார அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் சில அமர்வுகளை கண்டியில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 35 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 11 அமைச்சர்களும் 200 அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழித்தல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்ற இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply