மலேசியாவில் 139 கல்லறை தளங்கள்: பணத்திற்காக வெளிநாட்டவர்கள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம்
மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 139 கல்லறை தளங்கள் அனைத்தும் பணத்திற்காக வெளிநாட்டவர்கள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களுடையது என தெரியவந்துள்ளது. தாய்லாந்து நாட்டு எல்லையை ஒட்டியுள்ள மலேசிய நிலப்பரப்பில் 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. எலும்புக்கூடுகள் தோண்டப்பட்டு எடுக்கபட்ட வடக்கு மலேசிய எல்லைப்பகுதியில் 139 கல்லறை தளங்களும், 20 மேற்பட்ட முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தல் முகாம்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் அடைத்துவைக்கப்பட்டு கடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட 139 கல்லறை தளங்களிலும், எத்தனை சடலங்கள் உள்ளது பற்றி எதுவும் கூறமுடியாது என்று மலேசிய காவல்துறைனர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கொல்லபட்டவர்கள் அனைவரும் மியான்மர் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து பிழைப்பு தேடி மலேசியா வந்தவர்களாக இருக்கலாம் என்றும், அப்படிபட்டவர்களை கடத்தி அவர்களது உறவினர்களிடம் பணம் கேட்கப்படும் என்றும், அப்படி கொடுக்கவில்லை என்றால் சிறிய மூங்கில் கூட்டுகளில் பல நாட்கள் அடைத்துவைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை மற்றும் வன காவலர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் விரைவில் வெளிவரலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply