ஆஸ்திரியாவில் 14 வயது தீவிரவாதிக்கு ஜெயில் தண்டனை
ஆஸ்திரியாவில் உள்ள சாங்கட் போய்ல்டன் நகரை சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுவன் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர விரும்பினான். துருக்கியை சேர்ந்த இவன் கடந்த 2007–ம் ஆண்டு குடும்பத்துடன் ஆஸ்திரியா வந்தான். ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர விரும்பிய அவன் வியன்னாவில் ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டான். அதற்காக வெடிபொருட்களை வாங்கி சேர்த்தான். தகவலறிந்த போலீசார் அவனை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு 14 வயது சிறுவனுக்கு 24 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது. பின்னர் அவனது வயதை காரணம் காட்டி அதை 8 மாதமாக குறைத்து உத்தரவிட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply