பான்மசாலா, குட்காவுக்கு ஓராண்டு தடை தமிழக அரசு உத்தரவு
புகையிலை, நிகோடின் கலந்திருக்கும் பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கு தமிழகத்தில் ஓராண்டு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாக கமிஷனர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்பதால் புகையிலை மற்றும் நிகோடின் போன்றவை எந்தவொரு உணவுப்பொருளுடனும் கலக்கப்படக்கூடாது என்று உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் குறிப்பிடுகிறது. குட்கா மற்றும் பான்மசாலா என்ற பொருட்களில் புகையிலை மற்றும் நிகோடின் ஆகிய பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் குட்கா மற்றும் பான்மசாலா ஆகிய பொருட்களை தடை செய்வது, தற்போதைய சூழ்நிலைக்கு அவசியமாகிறது.
எனவே குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை, நிகோடின் கலந்துள்ள எந்த பெயர் கொண்ட பொருளாக இருந்தாலும், அவற்றை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, வினியோகம் செய்யவோ, விற்கவோ கூடாது என்று மே 23-ந் தேதியில் இருந்து ஓராண்டுக்கு தடை செய்ய உத்தரவிடப்படுகிறது. மக்கள் நலன் கருதி தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply