பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழந்தையின் உயிரைப் பறித்த துப்பாக்கி

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் உள்ள வீட்டில் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை  தன்னைத் தானே சுட்டுக் கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தது. தெற்கு விர்ஜினியாவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டைப் பார்வையிடுவதற்காக கடந்த திங்கட்கிழமை, தங்கள் 2 வயது மகனை கூட்டிக் கொண்டு அவனது பெற்றோர் சென்றிருந்தனர். அப்போது படுக்கை அறையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த அந்த 2 வயது குழந்தை மேஜையில் இருந்த துப்பாக்கி ஒன்றைக் கண்டெடுத்தது. குழந்தைகளுக்கே உண்டான ஆர்வத்தோடு அந்த துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவனது விரல் துப்பாக்கி விசையை அழுத்த துப்பாக்கி குண்டு அந்த குழந்தையின் தலையை துளைத்துச்சென்றது.

சத்தம் கேட்டு அலறியடித்து ஓடி வந்த சிறுவனின் பெற்றொர் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன், தலையில் ஏற்பட்ட பயங்கர காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply