வெற்றிலை சின்னத்தில் மஹிந்த போட்டியிட முடியாது:ஜனாதிபதி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை பிரதான வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் ஆராயப்பட்டபோது. அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச பல தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், 2 தடவைகள் ஜனாதிபதியாகவும் இருந்து விட்டார்.எனவே இம்முறையும் அவரை போட்டியிட அனுமதிக்க முடியாது. அந்தச் சந்தர்ப்பத்தைப் புதிய ஒருவருக்கு வழங்க வேண்டும். கட்சியின் தலைவர் என்றவகையில் தனது அரசியல் திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என அங்கிருந்தவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆயினும் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த கட்சியினரிடம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான வேட்பாளராகக் களமிறங்கத் தான் விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply