பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலுக்கு அமெரிக்கர்கள் ஆதரவு
பாகிஸ்தானின் வடமேற்கே ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளில் தலீபான் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் இவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல்கள் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான், ஏமன் மற்றும் சோமாலியாவில் அமெரிக்கா நடத்தி வரும் இத்தகைய தாக்குதல்களுக்கு, அமெரிக்கர்களிடம் ஆதரவு உள்ளதா? என கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. வாஷிங்டனில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று, அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது.
இதில் 58 சதவீதம் பேர் தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். 35 சதவீதத்தினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தாக்குதல்களுக்கு பெரும்பாலான ஆண்கள் ஆதரவளித்தாலும், பெண்கள் 50 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.
இதைப்போல ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறவில்லை என 56 சதவீதத்தினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply