வடக்கில் ஆழ ஊடுருவியுள்ள சில தீய சக்திகளாலேயே கலாசார சீரழிவு இல்லாதொழிக்க அணிதிரளுமாறு துவாரகன் அறைகூவல்
வடக்கில் இன்று ஏற்பட்டுள்ள கலாசார சீரழிவிற்கு அங்கு ஆழ ஊடுருவியுள்ள சில வெளி மாவட் டங்களைச் சேர்ந்த தீய சக்திகளின் திட்டமிட்ட செயற்பாடே காரணம். அதற்கு வடக்கிலுள்ள சில தீய சக்திகளும் துணை போய்க் கொண்டிருப்பது மிகுந்த வேதனை தரும் விடயமாகும். இந்த இரு தரப்பினரையும் இல்லாதொழிக்க நாம் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு பிரதான வீதிகளிலும் வசிக்கும் பிரதான குடியிருப்பாளர்களை ஒன்றிணைத்து கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தவுள்ளதாகவும் அதற்காக பொலிஸாரினதும் பொது மக்களினதும் ஒத்துழைப்பைத் தான் நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வெளியார் சிலர் திட்டமிட்டு ஆழ ஊடுருவி அங்குள்ள இளம் வயதினரிடையே மது மற்றும் போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து வருகின்றனர். அதனால் இளைஞர்கள் தவறான வழிகளில் செல்கின்றனர். இதற்காக விழிப்புணர்வுக் கருத்தரங்குகளையும் நடத்தத் தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாகத் தான் ஏற்கனவே இருதடவைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர் யாழ். மாவட்டத்தில் வெளியாரது வருகை புது முகங்கள் உலாவுதல் என்பவற்றில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply