இராதா, மனோ தலைமையில் புதிய அரசியல் கூட்டமைப்பு உதயமாகிறது
வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முக்கியமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் செறிந்து வாழும் மலையக மக்களை முக்கியத்துவமாகக் கொண்டு புதிய அரசியல் கூட்டமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. இந்த கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் தொடர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆராயப்பட்டு வருகின்றது. இந்த கூட்டமைப்புக்கு முற்போக்கு தமிழர் கூட்டமைப்பு அல்லது ஜனநாயக தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரை சூட்டுவதற்கான ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ. லோரன்ஸ் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதா கிருஸ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத் தின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலை வர் மனோ கணேசன் ஆகியோர் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து உருவாக் கவுள்ள இந்த புதிய கூட்டமைப்பு, மலையகம் மற்றும் வடக்கு – கிழக்குக்கு வெளியில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை தீர்பதற்காக செயற்படும் என அவர் கூறினார். நாடாளுமன்றம், பிரதேச சபை, உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த புதிய கூட்டமைப்பு செயற்படும். அத்துடன் எதிர்காலத்தில் சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் போன்றவற்றையும் இணைத்து செயற்பட இக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply