புலிகலின் தலைவர் பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்துவிட்டது. அவர் விரைவில் பிடிபடுவார்
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.
இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராஜபக்சே கூறியதாவது:-
பிரபாகரன் பிடிபடுவார்
“பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்துவிட்டது. அவர் விரைவில் பிடிபடுவார். விடுதலைப்புலிகள் அதன்பிறகு, ஏற்கனவே கிழக்கு மாகாணங்களில் நாங்கள் செய்ததுபோல் அரசியல் தீர்வுக்கு வழி செய்வோம். இதை போர் என்றுகூட நான் கூற மாட்டேன். ராணுவ நடவடிக்கைதான். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையை தொடங்கி இருக்கிறோம். ராஜீவ்காந்தி மற்றும் இலங்கை தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதை எங்களால் மறக்க முடியாது. பிரபாகரன் பிடிபட்டதும், இந்தியா விரும்பினால் அவரை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைப்போம்.
விடுதலைப்புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை நெருங்கிவிட்டோம். அதேபோல், கிழக்கில் முல்லைத்தீவை பிடிப்பதற்கு முன்னேறி வருகிறோம். பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மெதுவாக முன்னேறி வருகிறோம். போர் நிறுத்தம் செய்யும்போது விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வாங்கிக் குவித்து தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்வது வழக்கம்.
எனவே போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் நிச்சயம் மதிக்க மாட்டார்கள். அவர்கள் முதலில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடையட்டும். நாங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கிறோம்.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் என்னிடம் டெலிபோனில் தொடர்புகொண்டு பேசியபோது, போர் நிறுத்தம் செய்யும்படி கோரவில்லை. அப்பாவி தமிழர்கள் நிலை பற்றி தான் அவர் கவலை தெரிவித்தார். ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணமுடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் அவர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply