இரணைப்பாலையை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் படையினர்:பிரிகேடியர் உதய நாணயக்கார

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவரின் முக்கிய தளம் அமைந்துள்ள இரணைப்பாலை முழுவதையும் விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

படை நடவடிக்கைகள் மூலம் புலிகளை முற்றாக 30 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் படையினர் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 30 சதுர கிலோ மீற்றர் பரப்பை முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தின் மூன்று படைப் பிரிவுகளும், ஒரு அதிரடிப் படைப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பையும், அதனை அண்டிய பிரதேசங்களையும் கடுமையான மோதல்களுக்குப் பின்னர் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு ள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். புலிகள் தங்களிடம் எஞ்சியுள்ள பிரதே சங்களை படையினரின் தாக்குதல்களி லிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஐந்து பாரிய பாதுகாப்பு மண் அரண்களை அமைத்திருந்தனர்.

அவற்றில் மூன்று மண் அரண்களை பாதுகாப்புப் படையினர் கனரக ஆயுதங் களை பயன்படுத்தி முற்றாக தாக்கியழித்துள்ளதாக வன்னிகள முனையில் ஈடு பட்டுள்ள இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரணைப்பாலை பிரதேசத்தில் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மானின் முக்கிய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புலிகள் தற்பொழுது அந்தப் பிரதேசத்தி லிருந்துகொண்டே படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வருவதாக இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனும் தொடர்ச்சியாக இந்த பிரதேசத்திலிருந்து கட்டளை பிறப்பித்துள்ளமை தெரிய வந்துள்ளதாக இராணுவ புலனாய்வு துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா ஆகியோர் தலைமை யிலான இரு படைப் பிரிவுகளும், இராணுவத்தின் 8வது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் புதுக்குடி யிருப்பின் கிழக்கு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இதேவேளை, சாலை தென்பகுதியின் ஊடாக இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படை யினரும் முன்னேறி வருகின்றனர்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்ட வண்ணம் இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளும் கடுமையான மோதல் களுக்கு மத்தியில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply