பாராளுமன்ற தாக்குதலை அடுத்து ராணுவம் நடவடிக்கை: ஆப்கானிஸ்தானில் 37 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இருப்பினும் இந்த தாக்குதல், நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால் என ஆப்கானிஸ்தான் கருதுகிறது. இதன் காரணமாக தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தான் தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 5 மாகாணங்களில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 37 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 41 தீவிரவாதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களிடம் இருந்து 155 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த தகவல்கள், ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply