காட்டுக்குள் விழுந்து நொறுங்கிய விமானம் ஐந்து நாட்களுக்கு பின் கைக்குழந்தையுடன் இளம்பெண் உயிருடன் திரும்பிய அதிசயம்

தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார். ஆனால் ஒரு வயதுக்கூட ஆகாத கைக்குழந்தையுடன் இளம்பெண் காட்டுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். கொலம்பியாவில் உள்ள சோகோவின் குயிப்டோ என்ற இடத்திலிருந்து நுகுய் என்ற இடத்திற்கு பசிபிக் கடல் வழியாக ஒரு குட்டி விமானம் சென்றது. இந்த விமானம் அல்டோ பவுடோ என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை கர்லோஸ் மரியோ செபல்லோஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார். இதில் மரியா நெல்லி முரில்லோ (வயது 18) என்ற இளம்பெண் தன் கைக்குழந்தையுடன் சென்றார். இரண்டு என்ஜின் கொண்ட இந்த விமானம் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.

இத்தகவல் கிடைத்ததும் 14 பேர் கொண்ட மீட்புக்குழு விமானத்தைச் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விமானம் நொறுங்கி கிடந்த இடத்தை கண்டுபிடித்தனர். விமானத்தில் விமானி காக்பிட் பகுதியில் பிணமாக கிடந்தார். ஆனால், விமானத்தின் கதவு திறந்து கிடந்தது. இதனால் விமானத்தில் இருந்து யாராவது வெளியேறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காடுகளில் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மரியா நெல்லி முரில்லோ சிறிய காயத்துடன் இருப்பதை கண்டுபிடித்தனர். அத்துடன் அவர் மகன் என்ற காயத்துடன் நலமாக இருந்தான். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து மீட்புக்குழு அதிகாரி கூறுகையில் ‘‘அடர்ந்த காட்டுக்குள் விமானம் நொறுங்கி விமான பலியாகியுள்ள நிலையில் இளம்பெண் தன் கைக்குழந்தையுடன் உயிர் பிழைத்திருப்பது அதிசயம்’’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply