ஆஸ்திரேலிய வானில் அற்புதக் காட்சி

நியூசிலாந்தின் சவுத் ஐலாண்ட், ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் எனப்படும் அற்புதமான ஆகாயக் காட்சி தென்பட்டது. பூமியின் துருவப் பகுதிகளில் சூரிய ஒளித் துணுக்குகளால் ஏற்படும் அபூர்வமான ஒளிக் காட்சியே ஆரோரா என்று அழைக்கப்படுகிறது. தென்துருவப் பகுதியில் தோன்றும் ஒளிக்காட்சி ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் என்றும் வட துருவத்தில் தோன்றும் ஒளிக்காட்சி ஆரோரா போராலிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

தென்துருவத்தில் தோன்றிய இந்த ஒளிக்கட்சி, வழக்காகத் தோன்றுவதைவிட சற்று வடக்கில் தோன்றியது.

வியாழக்கிழமையன்று இரவில் மீண்டும் இந்தக் காட்சி தோன்றக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து வாசிகள் இந்த வாரத் துவக்கத்தில் கடும் குளிரையும் மீறி, இந்தக் காட்சிகளைப் படம் பிடித்தனர்.

“ஃபின்லாண்ட், நார்த் கனடா, ஐஸ் லாண்ட் போன்ற பகுதிகளில் இம்மாதிரியான ஒளிக்காட்சிகள் அடிக்கடி தெரியும்” என குயின்ஸ்டவுனைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ப்ளெய்ர் பட்டின்சன் பிபிசியிடம் தெரிவித்தார்.

“பலர் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக வருடக் கணக்கில் காத்திருக்கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

நியூசிலாந்தின் தென்பகுதி முனையான சவுத் ஐலாண்டில் வசிக்கும் மருத்துவரான ஸ்டீஃபன் வோஸ், பதினைந்து ஆண்டுகளாக இந்த ஒளிக் காட்சியைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply