சட்டத்திற்கு புறம்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: கனிமொழி குற்றச்சாட்டு

தென்மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கு புறம்பாக நடக்கிறது. அங்கு சட்ட விதிகள் எதுவும் மதிக்கப்படவில்லை. எனவே தான், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.

சட்டத்தை மீறி நடைபெறும் இந்த இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா பதில் கூற வேண்டிய நிலை வரும். தேர்தல் விதிகளை மீறும் அராஜகம் குறித்து ஆர்.கே.நகர் மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். எனவே தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள், ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரும் என அன்புமணி ராமதாஸ் கூறி இருக்கிறாரே என கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி., முதல்– அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. அதன் தீர்ப்பு வந்த பிறகுதான், முழுமையான நிலவரம் தெரியவரும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply