ஜூலை 1ஆம் தேதி வேலைநிறுத்தம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் அறிவிப்பு
இலங்கை கடற்படையால சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ராமேஸ்வரம் மீன்துறை அலுவலக வளாகத்தில் ராமநாதபுரம் மாவட்ட விசை படகு மீனவர் சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும், தடை செய்யப்பட்ட வலையின் பயன்பாட்டை தடுக்க வேண்டும், பாரம்பரிய கடல்பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 1ஆம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என்றும் விசைப்படகு மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனிடையே கடந்த 5 நாட்களாக சூறைக்காற்றால் கடலுக்கு செல்லாத மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்கச் சென்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply