அடுத்த ஆட்சியில் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு இரா. சம்பந்தன் நம்பிக்கை

பாராளுமன்றம் கலைக் கப்பட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே னவுடன் தாம் ஆரம்பித் துள்ள பேச்சுவார்த்தைகள் தொடரும். அது அவரது தலைமையிலான அடுத்த ஆட்சியிலும் தொடரும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தேர்தலின் பின்னர் நிலையானதொரு தேசிய அரசாங்கம் அமையப் பெறும் எனும் நம்பிக்கை எமக்குள்ளது. அதில் தமிழ் மக்களது பிரச்சினைக்கு நிச்சயம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார். இதன்போது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் குறித்த தகவல்கள், மீள்குடியேற்றம் உட்பட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னரும் மைத்திரிபால சிறிசேனவே இலங்கையின் ஜனாதிபதியாக இருப்பார் என்பதால் அவருடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு உட்பட பல விஷயங்கள் பேசப்பட்டதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply