அமெரிக்காவில் 30 அடி உயர கொடிக்கம்பத்தில் ஏறி கூட்டாட்சிக் கொடியை இறக்கிய கருப்பினப்பெண்

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் ஸ்டேட் ஹவுஸ் கட்டிடத்தின் கம்பத்திலிருந்த கூட்டாட்சிக் கொடியை, கருப்பினப் பெண் ஒருவர் இறக்கியுள்ள சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’ப்ரீ நியூசம்’ என்ற பெயர் கொண்ட அந்த கருப்பினப் பெண் 30 அடி உயரம் கொண்ட அந்த கொடிக்கம்பத்தின் மீது நேற்று ஏறி, கூட்டாட்சிக் கொடியை கீழே இறக்கியுள்ளார். அவரது இந்த நடவடிக்கையைக் கண்ட போலீசார், அவரிடமிருந்த கொடியை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர். சிறிது நேரத்தில் கூட்டாட்சிக் கொடி கம்பத்தில் மீண்டும் பறக்க விடப்பட்டது.  அண்மையில் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த தாக்குதலில் 9 கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ப்ரீ நியூசம், அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை சர்வதேச கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் #FreeBree (ப்ரீயை விடுதலை செய்யுங்கள்) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ப்ரீயை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக பலர் நன்கொடை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply