கடன் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- விவசாயிகள் யாரும் தற்கொலை செய்ய வேண்டாம்: கர்நாடக முதல்–மந்திரி வேண்டுகோள்
கர்நாடகாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். இந்த விவகாரம் முதல்– மந்திரி சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எதிர்க்கட்சியினர் சித்தராமையா அரசை விமர்சித்து வருகிறார்கள்.இந்த நிலையில் பெங்களூரில் முதல்– மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:–மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அரசு தயாராக உள்ளது.
அதனால் எந்த காரணத்திற்காகவும் விவசாயிகள் தற்கொலை முடிவை கையில் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.தற்கொலை செய்து கொள்வது பிரச்சினைக்கு தீர்வு இல்லை. கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஏற்கனவே மாநிலத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளையும் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி ஆலைகளை ஜப்தி செய்து அங்குள்ள சர்க்கரைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த சர்க்கரைகளை விற்பனை செய்து கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கப்படும்.கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காக கர்நாடக 2013–14ம் ஆண்டில் ரூ.170 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது. இதற்கு முன்பு இருந்த எந்த ஒரு அரசும் இவ்வளவு பெரிய தொகையை வழங்கியதில்லை.
விவசாயிகள் தற்கொலை செய்வதிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள்.மாநில அரசு எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும். ஆகவே எதற்காகவும் மாநில விவசாயிகள் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கக்கூடாது. விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மாநில அரசு முழு மூச்சுடனும், உண்மையுடனும் செயல்படும்.இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply