அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உயர்மட்ட மாநாடு
வன்னியில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்கும் முகமாக உயர்மட்ட மாநாடு ஒன்று நேற்று (மார். 16) மாலை வடமாகாண விஷேட செயலணித் தலைவரும் சமூகசேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வவுனியாவில் நிகழ்ந்துள்ளது. இதில் சமூகசேவைகள் அமைச்சு அதிகாரிகளினால் மேற்படி நிவாரண கிராமங்கள் சம்பந்தமான நேரடியாகப் பார்வையிட்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
வன்னியிருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள மக்களின் தேவைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீண்டநேரம் ஆராயப்பட்ட இம்மாநாட்டில் உடனடித் தேவைகள் பலவற்றிற்கு இரண்டொரு நாளில் துரிதமாக தீர்வுகாணப்படவுள்ளது. அதேவேளை ஏனைய பிரச்சினைகளை கட்டம் கட்டமாக விரைவில் தீர்வை எட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி மாநாட்டில் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் வவுனியா கட்டளைத் தளபதி பிரிகேடியர் பெரேரா வவுனியா பிரதேச செயலாளர் சுகாதார திணைக்களம் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கல்வித்திணைக்களம் மாவட்ட புனர்வாழ்வு செயலகம் இலங்கை மின்சார சபை ஆகியன உள்ளிட்ட வவுனியாவில் உள்ள சகல திணைக்கள அரச சபைகளின் தலைவர்கள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply