சமஸ்கிருதம் மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துகிறது: சுஷ்மா ஸ்வராஜ்
சமஸ்கிருத மொழி மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துவதாகவும் அதனை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டுமெனவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார்.தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடந்த உலக சமஸ்கிருத மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய சுஷ்மா இவ்வாறு கூறியிருக்கிறார்.60 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட சமஸ்கிருத வல்லுனர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பேசிய அவர், கங்கை அதனுடன் இணையும் நதிகளை புனிதமாக்குவது போல, சம்ஸகிருதமும் தூய்மைப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
பழைய மொழிகளில் ஒன்றான சம்ஸகிருதம் இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பேசப்படுகிறது. இருந்தபோதும், இந்திய அரசு அதனை பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.
இந்தியாவின் அரச ஒளிபரப்ப ஸ்தாபனமான தூர்தர்ஷன், வாரம் தோறும் அரை மணி நேரத்திற்கு சமஸ்கிருத நிகழ்ச்சிகளை வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
வினோத் மன்காரா என்ற இயக்குனர் சமஸ்திருத மொழி திரைப்படம் ஒன்றை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply