நாசா அனுப்பிய ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது
விண்வெளியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சிமையத்திற்கான பொருட்களை சுமந்து சென்ற ராக்கெட் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்து வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் தற்போது உள்ள விண்வெளி வீரர்களுக்காக உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை சுமந்தபடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன் 9 என்கிற ஆளில்லா ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
புறப்பட்ட 2 நிமிடத்தில்
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கார்னிவல் ஏவுதளத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்த ராக்கெட் புறப்பட்ட 2 நிமிடம் 19 விநாடிகளில் நடுவானில் வெடித்துச் சிதறியது.
முதல்கட்டத் தகவல்கள்
விண்ணில் வெடித்துச் சிதறிய பால்கன் 9 ராக்கெட்டின் பாகங்கள் அட்லாண்டிக் கடலில் விழுந்தன. ராக்கெட்டின் முன் பகுதியில் ஏற்பட்ட கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. எனினும் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவு வந்த பிறகே ராக்கெட் வெடித்துச் சிதறியது எதனால் என்பது குறித்த முழு விபரம் தெரிய வரும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கெவன் ஷாட்வெல் தெரிவித்தார்.
பெரும் இழப்பு
இந்த விபத்தால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா ஆய்வு மைய அதிகாரி வில்லியம் கேர்ச்ட்டேன்மியர் (WILLIAM GERSTENMAIER) தெரிவித்தார். எதிர் காலத்தில் இது போன்ற விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply