ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாக்களித்த தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள்

ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக மற்றும் தேமுதிக தொண்டர்கள் வாக்களித்துள்ளது நிரூபணமாகியுள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சேகர்பாபு 52522 வாக்குகளை பெற்றிருந்தார். அதே போல் 2014 பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் கிரிராஜன் 48301 வாக்குககளை பெற்றிருந்தார். இந்நிலையில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் அக்கட்சியின் வாக்குகள் யாருக்கு விழும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

அதே போல் 2009 பாராளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 12368 வாக்குகளை பெற்றது. அக்கட்சியின் வாக்குகளும் இடைத்தேர்தலில் யாருக்கு விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சி தொண்டர்களின் வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரனும், சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமியும் எதிர்பார்த்திருந்த வேளையில் அவர்களின் எண்ணங்களை தவிடு பொடியாக்கி அதிமுகவுக்கு வாக்களித்து அதிர்ச்சியை தந்துள்ளனர்.

இதன் மூலம் தங்கள் கட்சி தலைமைக்கும், எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் தொண்டர்கள் பெப்பே காட்டியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply