ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக முதல் பெண் நீதிபதி நியமனம்
ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக முதல் பெண் நீதிபதியை நியமித்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி உத்தரவிட்டுள்ளார். சிறுவர் நீதிமன்ற நீதிபதியாகவும், பெண் நீதிபதிகள் சங்க தலைவராகவும் உள்ள அனிசா ரசௌவியை, ஒன்பது பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதியாக கனி நியமித்துள்ளார். இம்மாத துவக்கத்தில் அவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிபரின் உத்தரவு தாமதமாக நேரிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக அனிசாவை நியமித்துள்ளதாக இன்று அறிவித்த அதிபர் அஷ்ரப் கனி, “நாட்டில் முதன் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பெண் நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதன் மூலம் நீதித்துறையின் அமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது” என்று கூறினார்.
ஆப்கான் அரசியலைப்பு சட்டப்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் ஒருவர், 10 ஆண்டுகள் அப்பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply