ரணிலின் தலைமைத்துவத்துக்கு எதிராக ஐ.தே.க. எம்.பிக்கள் நம்பிக்கையில்லா பிரேரணை

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக நீக்கும் வகையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று இன்று  காலையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஐ.தே. க. பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

கட்சியின் இணைச் செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் செனவிரத்னவினால் முன் வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மொனராகலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் செனவிரத்ன, இன்று ஐக்கிய தேசியக் கட்சி வங்குரோத்தான நிலைக்குச் சென்றுள்ளது. கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தவறாக எடுக்கும் தீர்மானங்களே இந்த நிலை ஏற்படக் காரணம்.

கட்சி எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணாமல் கால தாமதப்படுத்துவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply