சு.க.வில் போட்டியிடுவதற்கு சந்திரிகா தீர்மானம்
பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று அவசரமாக தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை அவரது செயலாளர் பீ.திஸாநாயக்கவும் உறுதிப்படுத்திய நிலையில், அவர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து போட்டியிடலாம் எனவும் அது தொடர்பிலான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்கப்படவுள்ளதாக பரவிய செய்திகளை அடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் போட்டியிட தீர்மானித்ததாக அரசியல் தகவல்கள் சுட்டிக்காட்டின. எவ்வாறாயினும் இந்த முடிவு குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயலாளர் பீ.திஸாநாயக்க,
தற்போதுள்ள நிலைமையில் சந்திரிக்கா அம்மையாருக்கு பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு பலமான கோரிக்கை உள்ளது. எனினும் அவர் அதனை இன்னும் ஏற்கவில்லை. தான் செயற்பாட்டு அரசியலை கைவிட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ள நிலையிலேயெ இதனை நாம் குறிப்பிடுகின்றோம்.
எனினும் தோல்வியடைந்த அபேட்சகர் ஒருவர் களமிறங்குவதானால் அவர் தனக்குள்ள வாக்குப் பலத்தை காரணம் காட்டுவதாக இருந்தால் 1994 ஆம் ஆண்டு சந்திரிக்காவுக்கு 63 வீதமான மக்கள் ஆணை உள்ளது. அத்துடன் அவர் தோல்வியடையவில்லை. தோல்வியடைஒயாதவர். அதனால் அவருக்கு போட்டியிட பூரண உரிமை உண்டு. இந்த கட்சி அவரது தந்தையால் உருவாக்கப்பட்டது. அதனைப் பாதுகாக்குமாறு பலரும் அழைப்பு விடுக்கின்றனர். இந் நிலையில் அவர் தேர்தலில் களமிறங்குவார். இதனை நான் பொறுப்புடன் கூருகின்றேன்.
அவர் பெரும்பாலும் கம்பஹா மாவட்டத்திலேயே களமிறங்குவார். எனினும் தற்போதைக்கு அதனை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. சுதந்திர கட்சிஇ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலேயே அவர் களமிறங்கு8வார். தோல்வியடைந்த ஒருவரின் வாக்குப் பலத்தைக் காட்டி அவரை களமிறக்கினல் அதனை விட தோல்வியடையாத முன்னள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குள்ள மக்கள் ஆணை மிக முக்கியமானது. அவருக்கு எதிராக எந்த குற்றச் சாட்டுக்களும் இல்லை. அப்படியானால் அவர் மிகவும் தகுதியானவர். அதன்படி அவர் போட்டியிடுவது குறித்து மிக விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கின்றேன். என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply