இலங்கை பிரதமர் தேர்தலை மக்கள் தேர்தலாக மாற்ற வேண்டும்: மாவை சேனாதிராசா
எதிர்வரும் பிரதமர் தேர்தலை மக்களின் தேர்தலாக மாற்ற பாடுபட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில், கட்சி நிர்வாகிகள், வடமாகாண உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவை சேனாதிராசா, தமிழ் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களின் கையில்தான் இந்த பாராளுமன்ற தேர்தலின் வெற்றி தங்கி இருக்கின்றது என்றும், இந்த தேர்தலை மக்களின் தேர்தலாக மாற்ற வேண்டிய பொறுப்பு இவர்களுக்கே உண்டு எனவும் தெரிவித்தார்.
மேலும், நீண்ட விடுதலை நோக்கிய பயணத்தில், இந்த முறையும் தமிழ் மக்கள் தங்கள் ஜனநாயக பலத்தை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தி, மீண்டும் சர்வதேசத்துக்கு நமது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply