விண்ணில் 14,500 மைல் வேகத்தில் பறந்த மர்ம பொருள்: வேற்று கிரகவாசிகள் வந்தார்களா?

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வானத்தில் பறந்த மர்ம பொருள் ஒன்றை படம் பிடித்துள்ளது. இந்த பொருள் வானத்தின் ஒளியை உமிழ்ந்தபடி 14,500 மைல் வேகத்தில் பாய்ந்து சென்றதாக நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நாசாவின் 5 கேமராக்கள் படம்பிடித்துள்ளன. மேலும், இது விண்கல்லாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. விண்கல்லாக இருந்தால் புவி ஈர்ப்பு விசை காரணமாக அது பூமியை நோக்கி வரும். ஆனால், இது புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பறந்து சென்றது.

விண்கல் என்றால் 20,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்திருக்க வேண்டும். எனவே, இது வேறு எதோ மர்ம பொருள் என்று கருகின்றனர்.

இதனை நேரில் கண்ட நூற்றுக்கணக்காணோர் முதலில் தீப்பிடித்த விமானம் என நினைத்தனர். ஒருவேளை வேற்று கிரகவாசிகள் தங்கள் வாகனத்தில் வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அவ்வப்போது அமெரிக்காவின் பல பகுதிகளில் வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் சென்றதை கண்டதாக பலர் கூறியிருக்கின்றனர். ஆனால், இதுபற்றி எந்த கருத்தையும் நாசா வெளியிடவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply