அமெரிக்காவில் தொடர்ந்து தாக்குதல்: கறுப்பர்கள் வழிபடும் ஆலயத்துக்கு தீ
அமெரிக்காவில் கறுப்பர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. சமீப காலமாக கறுப்பர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் கறுப்பர்கள் வழிபடும் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது சிலர் தாக்குதல் நடத்துகிறார்கள். சமீப நாட்களில் 3 கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. 10 நாட்களுக்கு முன்பு தெற்கு கரோலினாவில் உள்ள சர்லட்சன் என்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய வாலிபர் ஒருவர் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதில் 9 பேர் பலியானார்கள்.
நேற்று தெற்கு கரோலினாவில் உள்ள கிரிலிவில்லி என்ற இடத்தில் கறுப்பர்கள் வழிபடும் கிறிஸ்தவ ஆலயத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் ஆலயம் முற்றிலும் எரிந்து நாசமானது. பக்தர் ஒருவர் படுகாயம் அடைந்தார். தீ வைத்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் கறுப்பர்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலை உருவாகி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply