போரில் சிக்கியுள்ள பொதுமக்கள் நிலை குறித்து டில்லியில் ஆலோசனை
இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் பெருமளவிலான பொதுமக்கள் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.
மனித உரிமைகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் இந்தியத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள், கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பால் கேஸ்டெல்லா மற்றும் புதுடெல்லியில் இருக்கும் பிராந்திய தலைவர் ஃபிராங்காய்ஸ் ஸ்டேம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இலங்கையில் நடைபெற்று வரும் போரில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்தும் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply