கால்வாயில் ரெயில் கவிழ்ந்து 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சிறப்பு ரெயில் கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இதில் கமாண்டர் உள்பட 12 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரழ்ந்தனர். இந்த மாகாணத்தின் குஜ்ராத் நகரில் உள்ள புன்னோ ஆகல் என்ற இடத்தில் இருந்து ஹரியான் என்ற இடத்திற்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் அலுவலக அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர்.
இந்த ரெயில் ஜம்கே சட்தா அருகே உள்ள கால்வாயை கடந்து செல்லும்போது திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் நான்கு பெட்டிகள் கால்வாய்க்குள் கவிழ்ந்தன. இதில், 12 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து ரெயில்வே மந்திரி கவாஜா சாத் ரபிக்யூ கூறுகையில் ‘‘இந்த விபத்து தீவிரவாத செயலால் ஏற்பட்டது என்று சொல்லிவிட முடியாது. புலனாய்வுத்துறை ஏஜென்சி தங்களது விசாரணையை தொடங்கிவிட்டனர்’’ என்றார்.
80 வீரர்கள் மீட்கப்பட்டதாகவும், ஐந்து பேர் காயம் அடைந்ததாகவும் ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அந்த பாலம் பாழடைந்து செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரிகள் நேரில் சென்று மீட்புப் பணிகளை கவனித்துக்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply