ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி: ஜெயலலிதா இன்று எம்.எல்.ஏ.ஆக பதவி ஏற்கிறார்

ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டார். கடந்த ஜூன் 27-ந் தேதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. 30-ந் தேதி ஓட்டு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிகமாக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அன்றே அவர் எம்.எல்.ஏ.ஆக பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.ஆக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பதவி ஏற்கிறார். இதற்காக காலை 11 மணிக்கு அவர் கோட்டைக்கு வருகிறார். சபாநாயகர் முன்னிலையில் அவர் உறுதிமொழியைப் படித்து எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்பார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply