கிரீஸ் எதிர்க்கட்சி தலைவர் அண்டோனிஸ் சமராஸ் வேண்டுகோள்
கிரீசில் ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்பது குறித்து நாளை நடைபெறும் பொது வாக்கெடுப்பில், ஆதரவாக வாக்களிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் அண்டோனிஸ் சமராஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், கடந்த 2009–ம் ஆண்டில் இருந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த நெருக்கடியை தவிர்க்க கிரீஸ் நாட்டுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்தது. ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று கிரீஸ் அறிவித்துவிட்டது.
இருப்பினும் ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்பது பற்றி கிரீஸ் நாட்டு மக்களிடம் நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் அண்டோனிஸ் சமராஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்மூலம் பொருளாதார நெருக்கடியில் இருந்து கிரீஸ் நிச்சயம் மீண்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply