மரியாதையாக நடத்தினால் தான் பேச்சுவார்த்தை : ஒபாமாவுக்கு புதின் அறிவிப்பு

சமமாகவும், மரியாதையாகவும் நடத்தினால் தான் பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் நிபந்தனை விதித்துள்ளார்.  அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒபாமாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார் புதின். அதில் அவர், உலகில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமானால் அமெரிக்க – ரஷ்ய உறவு நன்றாக இருக்க வேண்டும் எனவும், உக்ரைன் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சமமாகவும் மரியாதையாகவும் எங்களை நடத்தினால் தான் எந்த பிரச்னை பற்றியும் பேச்சுவார்த்தைக்கு வர முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் உலகை எதிர்நோக்கி உள்ள அச்சுறுத்தல்கள், சிக்கலான பிரச்னைகளை நாம் தான் தீர்க்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply