அமெரிக்காவின் ரகசியங்களை சீனா உளவு பார்க்கிறது: ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் ரகசியங்களை சீனா உளவு பார்ப்பதாக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலரும், ஜனநாயகக் கட்சியின் முன்னணி அதிபர் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டன் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவின் பதவிக் காலம் வரும் 2016 ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து ஒபாமா சார்ந்த ஐனநாயகக் கட்சியின் முன்னணி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னிறுத்தப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒருபகுதியாக ஹாம்ப்ஷையரில் ஹி்லாரி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, சீன ராணுவம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிலிப்பைன்சில் சீனா அமைத்து வரும் செயற்கை தீவு மற்றும் அந்நாட்டின் ராணுவ கட்டமைப்புகள் பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கின்றன. அவை நமக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். ராணுவ தளவாட ஒப்பந்தங்கள், அரசு தகவல்கள் என அமெரிக்காவின் ரகசியங்களை திருடி அவற்றை தங்களுக்கு சாதகமாக சீனா பயன்படுத்தி கொள்கிறது என்றார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சீன எதிர்ப்பு கொள்கையை பின்பற்றும் ஹிலாரியின் சித்தாந்தம் அதிபர் தேர்தலில் அவருக்கு உதவுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply