கிரேக்கம்: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் உச்சகட்ட வாக்குப்பதிவு

கிரேக்கத்தின் கடன்நெருக்கடியை தீர்ப்பது தொடர்பில் கடன்கொடுத்தவர்கள் முன்வைத்திருந்த கடைசி நிபந்தனைகளை ஏற்க வேண்டுமா- இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பில் பெருமளவிலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கருத்துக்கணிப்புகளின் படி, இரண்டு தரப்பிலும் முடிவுகள் மிக நெருக்கமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. அரசாங்கத்தின் நீண்டகால சிக்கன நடவடிக்கைகளால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே, எந்த முடிவு வந்தாலும் தமக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று பலரும் நம்புகின்றனர்.

ஒரு வாரகால கட்டுப்பாடுகளுக்கு பின்னர், சில வங்கிகள் பணம் வற்றிவிட்ட நிலைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

நாடு ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்று அதிபர் ப்ரோகோபிஸ் பாவ்லோபோலோஸ் கூறியுள்ளார்.

‘இல்லை’ என்று முடிவு வந்தால், கிரேக்கம் யூரோ வலயத்திலிருந்து அனேகமாக வெளியேற நேரிடும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply