புலிகளுக்கு வெடிபொருள் கடத்திய மன்னார் பெண் மதவாச்சியில் கைது
வவுனியாவிலிருந்து மதவாச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் ஒன்றைப் படையினர் சோதனையிட்டபோது பெண்ணொருவரிடமிருந்து வெடி பொருட்கள், பட்டரிகள் நேரக் கணிப்புக் கருவிகள் போன்றவற்றை கைப்பற்றினர். வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்றினை நேற்று மாலை 6.30 மணியளவில் மதவாச்சி வீதித் தடையருகில் வைத்து படையினர் சோதனையிட்டபோதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மன்னார், கூழாங்குளத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் விஜிதா என்ற பெண்ணிடமிருந்தே இந்தப் பெருந்தொகையான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. சி4 ரகத்தைச் சேர்ந்த வெடி மருந்துகள், டெக்நேட்டர்கள், நேரக்கணிப்பீடடுக் கருவி, பட்டரிகள் ஆகியன இவற்றில் அடங்கும். மதவாச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply