மோதல் பிரதேசங்களில் சிறுவர்களை பாதுகாக்க விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்:பணிப்பாளர் ஆன் எம் வெனிமன்
இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களில் பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்த சிறுவர்களை பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்துமாறு ஐ.நாவின் சிறுவர்களுக்கான நிதியமான யுனிசெவ் அழைப்பு விடுத்துள்ளது.
மோதல் பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உயிரிழப்பதாகவும்,ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தொற்றுநோய்களிற்கு உள்ளாவதுடன் போதிய உணவின்றி குறை போசணையுடன் காணப்படுவதாக யுனிசெவ்வின் நிறைவேற்று பணிப்பாளர் ஆன் எம் வெனிமன் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.
மேலும், “வழமைபோன்று குறித்த பகுதிகளிற்கு உயிர்காப்பு நடவைக்கைகளிற்கும் விநியோக பணிகளை மேற்கொள்ளவும் மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் உடனடியாக அவசியமாகும், அத்துடன் மோதல் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கக் கூடிய இடங்களை நோக்கி பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.சிறுவர் உயிரிழப்புக்களை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என ஆன் எம் வெனிமன் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply