ஏர்பேக் பிரச்சனை: உலகம் முழுவதிலிமிருந்து 2600 பெராரி கார்கள் திரும்ப பெறப்படுகிறது

பாதுகாப்பு சாதனமான ஏர்பேக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக உலகம் முழுவதிலிமிருந்து 2600 பெராரி கார்கள் திரும்ப பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தாலியை சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் பெராரி. இந்த நிறுவனம் ஜப்பானை சேர்ந்த டகடா நிறுவனத்திடமிருந்து வாங்கிய ஏர்பேக்குகளை தன்னுடை 2600 கார்களில் பொருத்தியிருந்தது. ஆனால் இந்த ஏர்பேக்குகள் தொடர்பாக பல புகார்கள் வந்ததை அடுத்து அவைகள் பொருத்தப்பட்டுள்ள கார்களை திரும்ப பெறுவதாக பெராரி அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 800 பெராரி கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. இதுவரை டகடா நிறுவனத்தின் ஏர்பேக்குகளால் தொடர்பான விபத்துகளில் உலகம் முழுவதும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேருக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply