ஜூலை 30க்கு முன் சொத்து விபரங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்
இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை ஜூலை 30ம் திகதிக்கு முன்னர் சம்ர்பிக்குமாறு தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. அதனடிப்படையில் தற்பொழுது மாவட்ட மட்டங்களில் வேட்பாளர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இந்தமுறை தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிக்காட்டும் நிதி அறிக்கையை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு வேட்பாளர்அடையாள அட்டைகள் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது.
தமது சொத்து விபரங்களை சமர்பிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் இந்த வேட்பாளர் அடையாள அட்டையை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply