மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி சமாதான யாத்திரை
சமாதானத்தை வேண்டி தவக்கால பாதயாத்திரை இன்று (மார். 18) மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி இடம்பெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திலிருந்து இன்று காலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி தவக்கால பாதயாத்திரையானது நாளை வவுனியா கோமரசன் குளத்தில் உள்ள கல்வாரியைச் சென்றடையும்.
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள கத்தோலிக்க கிராமங்களிலிருந்து பெருமளவிலான பக்தர்கள் இன்று அதிகாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஒன்று கூடி பின் அங்கிருந்து காலை 6 மணியளவில் பாதயாத்திரையை ஆரம்பித்திருக்கின்றனர்.
இன்று ஆரம்பித்திருக்கின்ற சமாதானத்திற்கான தவக்கால பாதயாத்திரை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தலைமையில் அருட்தந்தைகளான டலிமா மற்றும் கொடிதோர் உள்ளிட்ட குருக்களால் வழி நடத்தி செல்லப்படுகின்றது.
மேற்படி பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கத்தோலிக்க மத குருக்கள் அருட்சகோதரிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். வவுனியா கோமரசங்குளத்தில் அமைந்துள்ள கல்வாரியைச் சென்றடைந்து அங்கு இடம்பெறும் விசேட திருச்சிலுவைப்பதை நிகழ்வுடன் சமாதானத்திற்கான பாதயாத்திரை நிறைவடையும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply