போர்விமானங்கள் குண்டுவீச்சு: லிபியாவில் எதிரிப்படைகளின் கப்பல் மூழ்கடிப்பு
லிபியாவில் அதிபர் கடாபி 2011-ம் ஆண்டு வெளியேற்றப்பட்டதில் இருந்து அங்கு குழப்பம் நிலவி வருகிறது. கிழக்கு பகுதியில் பெங்காசி நகரை தலைநகராக கொண்டு அதிகாரப்பூர்வ அரசு செயல்படுகிறது. எதிர் குழுவினர் தலைநகர் திரிபோலியை கைப்பற்றி நிர்வாகம் செய்து வருகின்றனர். இரு தரப்பினரும் தங்களுக்கு உட்பட்ட எல்லைப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள கடும் சண்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் முதல் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்துள்ளது. ஒருவருக்கொருவர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதலும் நடத்துகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம், அதிகாரப்பூர்வ அரசு படைகள் பெங்காசி துறைமுகம் அருகே மரீசா கடல் பகுதியில் எதிரிப் படையினரின் 2 கப்பல்கள் மீது போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஒரு கப்பல் கடலில் மூழ்கியது. இன்னொரு கப்பல் கடுமையாக சேதம் அடைந்தது.
இந்த தகவலை அதிகாரப்பூர்வ அரசின் செய்தி தொடர்பாளர் முகமது எஜ் ஹெஜாஜி உறுதிப்படுத்தினார். கிழக்கு பகுதியில் தீவிரவாதத்தை தூண்டிவிடுவதற்காக இந்த இரண்டு கப்பல்களிலும் ஏராளமான ஆயுதங்கள் ஏற்றப்பட்டு இருந்ததால் அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply