ராமநாதபுரம் அருகே கைது செய்யப்பட்டவரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை

ராமநாதபுரம் அருகே சையனைடு உள்ளிட்ட பொருள்களுடன் பிடிபட்டவர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதால், அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வழியாக இலங்ககைக்கு வெடிபொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, உச்சிப்புளி அருகே போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போலீசார், காரிலிருந்து, 300 கிராம் சையனைடு, 75 குப்பிகள், திசைகாட்டும் கருவிகள் மற்றும் இந்தியா மற்றும் இலங்கை நாட்டு பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இரண்டாவது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார், விடுதலை புலி இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதும், மற்ற இருவர் அந்த இயக்கத்தோடு தொடர்பில் இருப்பவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடரந்து கியூ பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply