மஹிந்த, கோத்­த­பா­ய­விற்கு வெள்ளை வேன் அச்­சு­றுத்­தலா :ஜீ.எல்.பீரிஸ் கேள்வி

முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் வசிக்கும் மிரி­ஹான பிர­தே­சத்தில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான போலி இலக்­க­மு­டைய வெள்ளை வேன் ஒன்­றினை மிரி­ஹான பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளமை தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்­துள்­ள­தாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்­துள்ளார். சந்­தே­கத்­திற்­கி­ட­மான ஆயு­தங்­க­ளுடன் நபர்கள் இவ் வானில் இருந்­துள்­ள­தாக தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். விசே­ட­மாக இதனை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்­ ஷவின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக கருத முடியும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அதற்­க­மைய அவர்­களின் நோக்கம் என்ன என்­பது தொடர்பில் உட­ன­டி­யாக விசா­ர­ணை­கள் மூலம் தெரி­யப்­ப­டுத்த வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் கூறி­யுள்ளார்.

உட­ன­டி­யாக இது தொடர்பில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளு­மாறு பொலி­ஸா­ரி­டமும், பாது­காப்பு செய­லா­ள­ரி­டமும் கேட்­டுக்­கொள்­கின்ற நிலையில் முன்னாள் ஜனா­தி­ப­திக்கும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply