மிரிஹானை வெள்ளைவான் இராணுவத்துக்கு சொந்தமானது

இரண்டு தினங்களுக்கு முன்னர் மிரிஹானை பிரதேசத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வெள்ளைவான் இராணுவத்துக்குச் சொந்தமானது என்றும், இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்குச் சொந்தமானது என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த துப்பாக்கி பிரசன்ன சில்வாவால் கடந்த 15 வருடங்களாகப் பாவிக்கப்பட்டதொன்று என்றும், அவருக்கு இராணுவத்திலிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்ட தனிப்பட்ட கைத்துப்பாக்கி என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

இராணுவத்துக்குச் சொந்தமான திஙி 59466 இலக்கம்கொண்ட வெள்ளை வான் மிரிஹானை பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சுற்றித்திரிந்தவேளையில் ஒப்பந்த நிறுவன மொன்றின் வாகனத்துக்குரிய இலக்கத்தகட்டை பயன்படுத்தியதாகவும், இந்த வானில் இருந்த மூன்று இராணுவ வீரர்களும் இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவு மற்றும் காலாற்படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் பொறுப்புவாய்ந்த பதவி வகித்துவரும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு இராணுவத்தால் பெற்றுக்கொடுக்க ப்பட்ட தனிப்பட்ட பாதுகாவலர்களே இவர்கள் என்றும் விசாரணைகளிலிருந்து அறிய முடிகிறது. மேற்படி சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் யூ.பி.டி.பி.பஸ்நாயக்க மற்றும் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் கிரிஷாந்த சில்வாவும் விசேட கவனம் செலுத்தியிருப்பதுடன், விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் இராணுவ பொலிஸ் பிரிவுக்கு உத்தரவிட்டி ருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

இந்த விசாரணைக்குப் புறம்பாக மிரிஹான பொலிஸாரும் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு பூரண ஒத்து ழைப்புவழங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்கு மூல மொன்றையும் அளித்துள்ளார்.

இராணுவ வீரர்கள் மூவரும் நீதிமன் றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பிணை வழங்கப்பட்டபோதும் இராணுவப் பொலிஸ் பாதுகாப்பில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரியும் மூன்று இராணு வீரர்களும் விசாரணைகளின்போது கடந்த காலத்தில் தவறுகள் இழைத்திருந்தால் அவர்களின் பதவிநிலையை பாராது இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக் கப்படுவார்கள் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் இராணு வத்தளபதி இராணுவப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த போலி இலக்கத்தகட்டைப் பயன்படுத்தி குறித்த வாகனத்தில் அந்த இராணுவ வீரர்கள் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் நிலவுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயவீர தெரி வித்தார்.

மேற்படி வாகனம் இராணுவத்துக்காக கொள்வனவு செய்யப்பட்டதா? அல்லது வடக்கிலிருந்து கொண்டுவரப்பட்டதா? என்பதை விசாரணைகளின் பின்னரே தெரிவிக்க முடியும் என்றும் கூறினார். இராணுவத்துக்குரிய வாகனங்களுக்கு சில சந்தர்ப்பங்களில் சில அதிகாரிகள் சிவில் இலக்கத்தகடுகளைப் பொருத்து வதற்கான வாய்ப்பு இருந்தபோதிலும் அப்படி செய்யக்கூடாதென்று இராணுவத் தலைமையகம் கடுமையாக அறிவுறுத்தி யிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவோ, வேறு உயர் அதிகாரிகளோ தமது தனிப்பட்ட ஆயுதத்தை பாதுகாப்பு அமைச்சுக்கோ தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கோ கொண்டுசெல்ல முடியாது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் மட்டும் அந்த ஆயுதத்தை தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் கையளித்துவிட்டுச் செல்ல வேண்டும். அந்த அதிகாரிகூட இந்த ஆயுதத்தை பயன்படுத்தும் முறையை நன்றாகப் பயிற்சிபெற்றவராக இருக்க வேண்டும்.

மேற்படி போலி இலக்கத் தகட் டைக்கொண்ட வாகனத்தைக் கொண்டு அரசியல் நடவடிக்கைக்காகவோ அல்லது தனிநபரின் பாதுகாப்புக்காகவோ பயன்படுத்தப்பட்டதல்ல என்பது ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply